/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியனுாரில் சேட்டை செய்த குரங்குகள் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிப்பு

ADDED : ஜூலை 12, 2024 10:48 PM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் ஊராட்சியில், கூட்டமாக வரும் குரங்குகள், வீட்டு தோட்டங்களை நாசம் செய்வதோடு, கேபிள் ஒயர்களை அறுப்பதும், வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை துாக்கிச் செல்வதும், சிறுவர்களை அச்சுறுத்துவது என, குரங்குகள் பல்வேறு சேட்டையில் ஈடுபட்டு வந்தது.
களியனுார் கிராமத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் குரங்குளை பிடிக்க வேண்டும், களியனுார் ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி, காஞ்சிபுரம் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவின்படி, காஞ்சிபுரம் வனச்சரகர், செயலாக்கம் கோபகுமார் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் களியனுாரில் கூண்டு அமைத்து, கிராமத்தினருக்கு தொல்லை கொடுத்து வந்த, 7 குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.