/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தண்டுமாரி அம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம்
/
தண்டுமாரி அம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம்
ADDED : ஆக 04, 2024 01:47 AM

ஸ்ரீபெரும்புதுார்:போந்துார் தேவி தண்டுமாரி அம்மன் 36ம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நேற்று 100க்கும் மேற்பட்ட பெண்கள், அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் கிராமத்தில் தேவி தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 36ம் ஆண்டு தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது.
இதையடுத்து, நேற்று காலை, முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மி நடனம் ஆடி, தண்டுமாரி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின், புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, இன்று, காலை 11.:00 மணிக்கு கூழ் வார்த்தல், மாலை 6:00 மணிக்கு தீ மிதித்தல் நிகழ்வு நடைபெறும்.