/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.25 லட்சத்தில் இரு சரக்கு லாரிகள் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி வழங்கல்

ADDED : மே 30, 2024 10:11 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியில் உள்ள சமூகத் தொழில் முனைவருக்கான ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமியில், காஞ்சிபுரம் மற்றும் வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள் 60 பேருக்கு குறு நிதித் துறை சார்பில் அதில் பணியாற்றுவதற்காக, நபார்டு உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
நபார்டு வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் அஜய் சூட் பயிற்சி பெற்ற பயனாளிகளிடம் கலந்துரையாடினார். இதையடுத்து விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மொத்தம் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொலீரோ சரக்கு வாகனத்தை இரு விவசாயிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நபார்டு வங்கியின் முதுநிலை பொது மேலாளர்கள் சங்கரநாராயணன், ஆனந்த் சோமசுந்தரம், மாவட்ட வளர்ச்சி அலுவலர் விஜய் நிஹார், வேளாண்மை இணை இயக்குனர் ராஜ்குமார், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத் தலைவர் கல்பனாசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.