ADDED : ஜூலை 02, 2024 02:43 AM

சென்னை, : மாநிலங்களுக்கு இடையிலான 63வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில், 27ல் துவங்கி நேற்றுமுன் தினம் நிறைவடைந்தது.
இதில், இரண்டு முறை 'சாம்பியன்' பட்டம் வென்ற தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இருபாலர் அணிகளும் பங்கேற்றன.
போட்டியில், தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், தமிழக அணி ஆண்களில் 35 பேரும், பெண்களில் 30 பேரும் பங்கேற்றனர்.
இம்முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர்கள், மும்முறை தாண்டுதலில் 2 செ.மீட்டரிலும் நீளம் தாண்டுதலில் 3 செ.மீட்டரிலும் தங்க பதக்கங்களைதவற விட்டனர்.
அதேபோல், பெண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனையர், தங்களுக்கான லைனை கடந்து ஓடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.இதனால், வெள்ளிபதக்கம் இழக்கநேரிட்டது.
ஒட்டுமொத்தமாக, ஹரியானா மாநிலம்133 புள்ளிகள் பெற்றுசாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழகம், 122 புள்ளி களுடன் இரண்டாம் இடத்தை தனதாக்கிஆறுதல் அடைந்தது.
இதனால், தமிழகம் 'ஹாட்ரிக்' பட்டத்தை தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.