/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்
/
தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்
ADDED : மார் 01, 2025 12:10 AM
ஏனாத்துார், காஞ்சிபுரம் ஏனாத்துாரில்உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யலாலயா நிகர்நிலை பல்கலை கழகத்தின் கணினி அறிவியல் பயன்பாட்டு துறைசார்பில், தேசியஅறிவியல் தினம், 'ஏ.ஐ., பால்ஆல் தி ப்யூச்சர் பிகின்ஸ் ஹியர்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது.
பல்கலை துணைவேந்தர் ஸ்ரீனிவாசு சிறப்புரையாற்றினார். புல தலைவர் - அறிவியல்பேராசிரியர் முனைவர் வெங்கட்டரமணன் வாழ்த்துரை வழங்கினார்.
கும்பகோணம் ஜெ.இ., எஜூகேஷனல் சர்வீஸ்எல்.எல்.பி., தலைமை வகித்து, ரோபோ உரையாடலை அறிமுகப்படுத்தி, அறிவியல் தின புத்தகத்தை வெளியிட்டார்.
முன்னதாக, கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டு துறைதலைவர் ரமேஷ்வரவேற்றார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாபு நன்றி கூறினார்.