/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நத்தப்பேட்டை சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம்
/
நத்தப்பேட்டை சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம்
ADDED : ஜூலை 05, 2024 12:07 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர், களியனுார் சாலையில் இருந்து, நத்தப்பேட்டை வழியாக முத்தியால்பேட்டைக்கு செல்லும் புறவழி சாலை உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், நத்தப்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை அருகில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மண் அரிப்பு காரணமாக சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சாலையோர பள்ளத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.