/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிழற்குடை பராமரிப்பில் அலட்சியம் மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
/
நிழற்குடை பராமரிப்பில் அலட்சியம் மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
நிழற்குடை பராமரிப்பில் அலட்சியம் மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
நிழற்குடை பராமரிப்பில் அலட்சியம் மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
ADDED : ஏப் 12, 2024 10:46 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
இந்த நிழற்குடை ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பணிக்கு செல்லும் அப்பகுதிவாசிகள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாததால், விளம்பரங்கள் ஒட்டும் இடமாக மாறி இரவு நேரங்களில் 'பார்' ஆக மாறி வருகிறது.
இதனால், இந்த நிழற்குடையை அப்பகுதிவாசிகள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நிழற்குடை பராமரிப்பில் சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததே காரணம் என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொணடு வர வேண்டுமென, கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடி மையமாக மாறும் கால்நடை அலுவலகம்
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி.
இங்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலகம் கடந்த 2018ம் ஆண்டு திறப்பு விழா நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு மற்றும் விடுமுறை நாட்களில் அலுவலக வளாகம் 'குடி' மகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.
இதனால், அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பகுதிவாசிகள்கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிழற்குடை இல்லாத பேருந்து நிலையம்
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு கிராமம், ஆந்திர மாநில மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் நெசவு மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். கிராமத்தில் பேருந்து நிலையம் உள்ளது.
ஒற்றை இலக்கத்திலான பேருந்து சேவை மட்டுமே இந்த கிராமத்திற்கு உள்ளது.
நெசவு மற்றும் விவசாயம் சார்ந்த பணிகள் காரணமாக, கிராமத்தினர், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, பொன்னை, வேலுார் காட்பாடி உள்ளிட்ட ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
குறிப்பிட்ட நேரத்திற்கு கிராமத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகளுக்காக, அப்பகுதிவாசிகள் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். பேருந்து நிலையத்தில் நிழற்குடை வசதி இல்லை.
இந்த பகுதியில் உள்ள அம்மன் கோவில் வாசலில் காத்திருந்து, கிராமத்தினர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
விடியங்காடு பேருந்து நிலையத்தில், குடிநீர், இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு கிராமம், திருவள்ளூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்து உள்ளது.
ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் வழியாக பொன்னை செல்லும் சாலையில் உள்ள இந்த கிராமத்தில், ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
விடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைகுளம், வெங்கடாபுரம், புதுார் மேடு என ஒட்டுமொத்தமாக, 3,500 குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர்.
இவர்களின் மருத்துவ வசதிக்காக, விடியங்காடு கிராமத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைக்கும் இது போதுமானதாக இல்லை.
அவசர சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு, வேலுார் மாவட்டம், பொன்னையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. விடியங்காடு ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

