ADDED : ஜூன் 28, 2026 03:52 PM
உத்திரமேரூர், ஜூன் 29–
நெல்லிமேடு சுடுகாடிற்கு சுற்றுச்சுவர், எரிமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது நெல்லிமேடு கிராமம். இக்கிராமத்திற்கான சுடுகாடில் போதுமான இடவசதி இல்லாத நிலை இருந்தது.
மேலும், சுடுகாடு அருகே இருந்த விவசாய நிலங்கள் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டு வீட்டுமனை பிரிவுகளாக மாறி உள்ளது.
இதனால், சுடுகாடிற்கு சென்றுவர பாதை வசதி தடை போன்ற இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையின்படி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு நெல்லிமேடு சுடுகாடிற்கு புதிதாக இடம் 3 மாதத்திற்கு முன் தேர்வு செய்யப்பட்டது.
எனினும், சுடுகாடிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அந்த இடத்தில் எரிமேடை, மின்வசதி, தண்ணீர் மற்றும் பாதை சுற்றுச்சுவர் போன்ற எவ்வித அடிப்படை வசதியும் மேற்கொள்ளபடாமல் உள்ளது.
இதனால், அப்பகுதி சுடுகாடில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே சடலங்களை அடக்கம் மற்றும் எரிவூட்டு செய்யும் நிலை உள்ளது.
எனவே, நெல்லிமேடு சுடுகாடு பகுதியில் சுற்றுச்சுவர், எரிமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
