/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இன்றி நெமிலி தரைப்பாலம்
/
தடுப்பு இன்றி நெமிலி தரைப்பாலம்
ADDED : ஜூலை 16, 2024 01:07 AM

நெமிலி, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், சேந்தமங்கமலம் கிராமத்தில் இருந்து, நெமிலி பேரூராட்சி வழியாக, பானாவரம்செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை குறுக்கே,3 மீட்டர் நீளத்திற்கு கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலம் செல்கிறது. இந்த தரைப்பாலத்தின் வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, சேந்தமங்கலம் வழியாக பானாவரம், சோளிங்கர் வரை மற்றும் பணப்பாக்கம், சோளிங்கர், சேந்தமங்கலம் வழியாக, காஞ்சிபுரம் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை வாகனங்கள் செல்கின்றன.
கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அறவே இல்லை. இதனால்,வாகனங்கள் ஓட்டுனரின்கட்டுப்பாட்டைஇழந்தாலும், ஆற்றில் கவிழும் அபாயம் உள்ளது.
மேலும், தரைப்பாலத்தின் கரையோரம் கோழிக்கழிவு குப்பை மற்றும் பிற கழிவுகளை கொட்டுவதால், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தில், தரைப் பாலத்தை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரைப்பாலத்தின் இரு புறமும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்துள்ளது.