/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊத்துக்காடு சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம்
/
ஊத்துக்காடு சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம்
ADDED : மார் 06, 2025 08:54 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கான கட்டடம் மிகவும் பழுதடைந்ததை அடுத்து, தற்போது அப்பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான நுாலக கட்டடத்தில் செயல்படுத்தப்படுகிறது.
அதில் போதுமான இடவசதி இல்லாததால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கென புதிய கட்டட வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது. அதன்படி, அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் ஏற்படுத்த, மாநில நிதிக்குழு மானிய நிதியின் கீழ், 41.30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சுகாதார நிலையத்திற்கான பணிகளை துவக்கி வைத்தார்.
உத்திரமேரூர் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், அப்பகுதி ஊராட்சி தலைவர் சாவித்திரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.