ADDED : ஜூலை 08, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஒன்றியம், விசூர் ஊராட்சியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, ஹேண்ட் இன் ஹேண்ட் இணைந்து நடத்தும் பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் பயிலும் 50 மாணவியருக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஓய்வு பெற்ற அரசு கூடுதல் தலைமை செயலர் சி.வி சங்கர் தலைமை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனதுணை தலைவர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாக்க அலுவலர் சகானா சங்கர் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
இதில், குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.