/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரும்பாக்கம் சுகாதார நிலையத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பறை
/
கரும்பாக்கம் சுகாதார நிலையத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பறை
கரும்பாக்கம் சுகாதார நிலையத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பறை
கரும்பாக்கம் சுகாதார நிலையத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பறை
ADDED : ஏப் 15, 2025 01:00 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சி, கரும்பாக்கத்தில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் தினமும் வந்து, மருத்துவ சேவை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துணை சுகாதார நிலையத்தில் போதிய கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தது. எனவே, அப்பகுதியில் சமுதாய கழிப்பறை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, 2023 --- 24ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ், 3.5 லட்சம் ரூபாய் செலவில், புதிய சமுதாய கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.
இந்த சமுதாய கழிப்பறை அருகே மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து செல்வது தொடர்ந்து நடந்து வந்தது.
இதனால், சமுதாய கழிப்பறை ஆறு மாதத்திற்கு மேலாக பூட்டிய நிலையிலே இருப்பதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். துணை சுகாதார நிலையத்திற்கு வருவோர், சமுதாய கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, பூட்டி கிடக்கும் சமுதாய கழிப்பறையை திறக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.