/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
* செய்தி மட்டும் உத்திரமேரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் தயார்

ADDED : அக் 30, 2024 08:58 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, சன்னிதி தெருவில், பல ஆண்டுகளாக சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், பதிவாளர் உட்பட 15 பேர் பணியாற்றுகின்றனர்.
உத்திரமேரூர் நகர் பகுதி மட்டுமின்றி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமத்தினர், நிலம், வீடு, வீட்டுமனை போன்றவற்றை வாங்க, விற்க, பத்திரப்பதிவு செய்யவும், தாங்கள் வாங்கும் சொத்துக்கு வில்லங்க சான்று பெறுதல், திருமணங்களை பதிவு செய்தல் போன்ற பல பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
மக்களின் முக்கிய ஆவணங்களை இந்த அலுவலகத்தில் பதிவு செய்வது மட்டுமின்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கான கட்டடம், பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. மழைக்காலங்களில், இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டடம் இடிந்து விழக்கூடும் என அச்சத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து, அவ்வப்போது நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட பொதுப்பணித் துறை சார்பில், 1.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டு, தற்போது பணி முழுமையடைந்து அடுத்த சில தினங்களில் திறப்பு விழா காண உள்ளது.