/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்பொடவூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் ஏற்படுத்த கோரிக்கை
/
மேல்பொடவூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் ஏற்படுத்த கோரிக்கை
மேல்பொடவூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் ஏற்படுத்த கோரிக்கை
மேல்பொடவூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் ஏற்படுத்த கோரிக்கை
UPDATED : மே 19, 2025 02:59 AM
ADDED : மே 18, 2025 10:50 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேல்பொடவூர் கிராமம். இக்கிராம காலனி பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் ரேஷன் கடை இயங்குகிறது.
இதில், அப்பகுதியைச் சேர்ந்த 300 குடும்ப அட்டைதாரர்கள் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் கடைப் பொருட்களை பெறுகின்றனர்.
இந்நிலையில், இந்த ரேஷன் கடை கட்டடத்தின் தளம் பழுதடைந்து, மழை நேரத்தில் கடைக்குள் நீர் சொட்டுகிறது. குறிப்பாக பருவ மழைக்காலத்தில் கட்டடம் மிகவும் ஈரம் கொண்டதாகவும், தொடர்ந்து மழைநீர் சொட்டுதல் பிரச்னை இருந்து வருகிறது.
இதனால், அச்சமயங்களில் ரேஷன் கடையில் இருப்பு வைக்கப்படும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, மேல்பொடவூர் கிராம ரேஷன் கடைக்கு, புதிய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.