/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கம் சாலையோரம் தடுப்பின்றி மின்வழித்தட கம்பங்கள்
/
செம்பரம்பாக்கம் சாலையோரம் தடுப்பின்றி மின்வழித்தட கம்பங்கள்
செம்பரம்பாக்கம் சாலையோரம் தடுப்பின்றி மின்வழித்தட கம்பங்கள்
செம்பரம்பாக்கம் சாலையோரம் தடுப்பின்றி மின்வழித்தட கம்பங்கள்
ADDED : மார் 31, 2025 11:53 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, செம்பரம்பாக்கம் கிராமத்தில் இருந்து, பெரியகரும்பூர் கூட்டு சாலை வழியாக கூரம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, காஞ்சிபுரம், அரக்கோணம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் கூத்தாழ்வான் கோவில் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு கூரம் செல்கின்றனர்.
அதேபோல, ஒழுக்கோல்பட்டு, வதியூர், கீழ்வெண்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோர் கூரம், செம்பரம்பாக்கம் கிராமங்களின் வழியாக, காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையோரத்தில், ஆபத்தான முறையில் மின்வழித் தடத்தை தாங்கி நிற்கும் இரு மின் கம்பங்கள் உள்ளன. ஒரே நேரத்தில், எதிர் எதிரே வாகனங்கள் செல்லும் போது, மின் கம்பங்களில் வாகனங்கள் உரசும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் இரு மின் கம்பங்கள் அருகே, தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.