/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் தெருக்களில் வடிகால்வாய்க்கு வலியுறுத்தல்
/
வாலாஜாபாத் தெருக்களில் வடிகால்வாய்க்கு வலியுறுத்தல்
வாலாஜாபாத் தெருக்களில் வடிகால்வாய்க்கு வலியுறுத்தல்
வாலாஜாபாத் தெருக்களில் வடிகால்வாய்க்கு வலியுறுத்தல்
ADDED : ஏப் 22, 2025 12:29 AM

வாலாஜாபாத், ஏப். 22-
வாலாஜாபாத் பேரூராட்சி, 10வது வார்டில் போஜக்காரத்தெரு உள்ளது. இத்தெருவில் இதுவரை மழைநீர் வடிகால்வாய் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் சாலை மற்றும் சாலையோரங்களில், மழைநீர் தேங்குவதோடு, சாலையோர குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்து விடும் நிலை ஏற்படுகிறது.
இதேபோன்று, 10வது வார்டில் உள்ள கோபால் நாயுடு குறுக்குத் தெரு, தாசப்ப சுபேதர் தெரு போன்ற பகுதிகளிலும், தெருக்களின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.
இதனால், மழைக்காலத்தில் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இத்தெருக்களில் வீட்டு கழிவுநீர் வெளியேறவும் வழிவகை இல்லாமல் உள்ளது.
இது தொடர்பாக, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும், பல முறை மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே, போஜக்காரத் தெரு, கோபால் நாயுடு குறுக்குத் தெரு மற்றும் தாசப்ப சுபேதர் தெரு பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.