ADDED : மார் 07, 2025 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், செவிலியர் கண்காணிப்பாளர் தேன்மொழி என்பவர் மீது, அங்கு பணிபுரியும் செவிலியர்கள் ஏற்கனவே புகார் தெரிவித்து வந்தனர்.
பணியின்போது தொந்தரவு அளிப்பதாகவும், மன உளைச்சல் ஏற்படும் வகையில் பேசுவதாகவும் கூறி, மருத்துவமனையின் இணை இயக்குனர், கண்காணிப்பாளர் ஆகியோரிடம், செவிலியர்கள் பலரும் ஏற்கனவே தேன்மொழி மீது புகார் அளித்திருந்தனர்.
ஆனால், போதிய நடவடிக்கை இல்லாததால், செவிலியர் கண்காணிப்பாளரை கண்டித்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வாசலில், செவிலியர்கள் பலரும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மருத்துவமனையில் பணியாற்றும் 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.