/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்
/
காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்
ADDED : மே 02, 2024 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காசநோயாளிகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட காசநோய் பிரிவு சார்பில், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் காசநோயாளிகளுக்கு சத்துமாவு, பருப்பு வகை, முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைவளாகத்தில் உள்ள, காசநோய் பிரிவு அலுவலகத்தில் நடந்தது. இதில், மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் பொறுப்பு காளீஸ்வரி, 122 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.