/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டியலில் ஹிந்தியில் பெயர் வாக்காளர் ஓட்டளிக்க எதிர்ப்பு
/
பட்டியலில் ஹிந்தியில் பெயர் வாக்காளர் ஓட்டளிக்க எதிர்ப்பு
பட்டியலில் ஹிந்தியில் பெயர் வாக்காளர் ஓட்டளிக்க எதிர்ப்பு
பட்டியலில் ஹிந்தியில் பெயர் வாக்காளர் ஓட்டளிக்க எதிர்ப்பு
ADDED : ஏப் 20, 2024 12:28 AM

சென்னை:ஆதம்பாக்கம் சுரேந்தர் நகர், ஆறாவது தெருவைச் சேர்ந்த தம்பதி, டி.ஏ.வி., பூத் எண், 310ல், நேற்று ஓட்டளிக்க சென்றனர். வாக்காளர் பட்டியலில், கணவரின் பெயர் ஹிந்தியில் இருந்துள்ளது.
இதனால் பூத் முகவர்கள், அவரை ஓட்டளிக்க கூடாது என, தேர்தல் அலுவலரிடம் முறையிட்டனர். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் விசாரித்தனர்.
வாக்காளர் வரிசை எண்ணை வைத்து, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் சோதனை செய்தனர். அதிலும் அவருடைய புகைப்படம் மற்றும்பெயர் ஹிந்தியில் இருந்தது.
ஓட்டுச்சாவடி வாக்காளர் பட்டியலிலும், அவரதுபெயர் ஹிந்தியில் இருந்ததால், ஆதம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர், சம்பந்தப்பட்ட நபரை ஓட்டளிக்க அனுமதித்தனர்.