/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் அதிகாரிகள் - கவுன்சிலர்கள் வாக்குவாதம்
/
கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் அதிகாரிகள் - கவுன்சிலர்கள் வாக்குவாதம்
கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் அதிகாரிகள் - கவுன்சிலர்கள் வாக்குவாதம்
கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் அதிகாரிகள் - கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ADDED : ஜூன் 26, 2024 09:44 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், மாநில, மத்திய அரசு திட்ட நிதிகளின் கீழ் பல்வேறு இடங்களில், பொது கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வாகம், பொது ஏலம் விட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பொது ஏலம் விடாமல் அதிக கட்டணம் வசூலித்து வருகிறது.
குறிப்பாக, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில், சுற்றுலா பயணியரிடம் அடாவடியாக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகனிடம், இலவச கழிப்பறையாக மாற்ற வேண்டும் என, ஏற்கனவே கோரிக்கை மனு அளித்தனர்.
அது செயல்படுத்தாததால், நேற்று, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
ஆளுங்கட்சி அரசியல் பின்புலம் உள்ளவர்கள் சிலர், கழிப்பறைகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஒரு தொகை பெற்று கொண்டு உள்வாடகைக்கு விட்டுள்ளனர். உள்வாடகைக்கு எடுத்தவர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். 2008ல், ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே, 18 லட்ச ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது.
அதன்பின் ஏலம் போகவில்லை. இதுவரையில், கழிப்பறைக்கு எவ்வளவு ஏலம் போகிறது என்கிற விபரம் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கழிப்பறைகளை ஆய்வு செய்து விட்டு, முறையான கட்டணத்தை வசூலிக்க நோட்டீஸ் ஒட்டப்படும்' என்றார்.