/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆளுங்கட்சி கொடி கம்பத்தை அகற்ற தயங்கும் அதிகாரிகள் காற்றில் பறக்குது தேர்தல் நடத்தை விதிகள்
/
ஆளுங்கட்சி கொடி கம்பத்தை அகற்ற தயங்கும் அதிகாரிகள் காற்றில் பறக்குது தேர்தல் நடத்தை விதிகள்
ஆளுங்கட்சி கொடி கம்பத்தை அகற்ற தயங்கும் அதிகாரிகள் காற்றில் பறக்குது தேர்தல் நடத்தை விதிகள்
ஆளுங்கட்சி கொடி கம்பத்தை அகற்ற தயங்கும் அதிகாரிகள் காற்றில் பறக்குது தேர்தல் நடத்தை விதிகள்
ADDED : மார் 21, 2024 10:40 AM

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 16ல் இருந்தே, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கலைச்செல்வி, மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களையும், சுவர் விளம்பரங்களையும், அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் மற்றும் முதல்வர் படங்கள், எம்.எல்.ஏ., - எம்.பி., பெயர்களை மறைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, சின்ன காஞ்சிபுரம் ஆனை கட்டி தெரு, அமுதுபடி தெரு, புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் பின்புறம் தி.மு.க,, கொடிக் கம்பம் அகற்றப்படாமல் உள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு கிளை நுாலக கட்டடத்தின் வெளிப்புறத்தில் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பெயர் மறைக்கப்படவில்லை.
மேலும், நுாலகத்தில் உட்புறத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
அதேபோல, ஏகாம்பரநாதர் சன்னிதி பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பெயர் எழுதப்பட்ட பெயர் பலகை மற்றும் கல்வெட்டு மறைக்கப்படவில்லை.
ஆளுங்கட்சியினர் கொடிக் கம்பங்களை அகற்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், காஞ்சிபுரம் மாநகராட்சியில், தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

