/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடம் சந்திப்பில் கழிப்பறை திறப்பு
/
ஒரகடம் சந்திப்பில் கழிப்பறை திறப்பு
ADDED : ஜூன் 11, 2024 08:17 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியில் ஒரகடம் அமைந்துள்ளது.
இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. அதேபோல, ஒரகடம் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைக்கு பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு பேருந்து பிடித்து நாள்தோறும் ஒரகடம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஒரகடம் பகுதியில் கழிப்பறை வசதி இல்லை. இதனால், ஒரகடம் வரும் பயணியர்கள் இயற்கை உபாதைகை கழிக்க இடமின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவியர் அவதி அடைந்து வந்தனர்.
மேலும், திறந்தவெளியில் மக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு நிலவிவருகிறது.
இந்த நிலையில், பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜான திட்டத்தின் கீழ், 6.43 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரகடம் மேம்பாலம் கீழ் சமுதாய கழிப்பறை கட்ட திட்டமிடப்பட்டது.
கட்டுமான பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.