ADDED : மே 11, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:கோடைக் காலத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் மாநகராட்சி, கூட்டுறவுத் துறை, அரசியல் கட்சியினர் சார்பில், வெயிலில் நடமாடுவோரின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் நலச் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது.
சங்க தலைவர் சேகரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகம்,தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானம் மற்றும் உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல் துறை நலச் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.