/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று நடவுக்கு எதிர்ப்பு: ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
/
புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று நடவுக்கு எதிர்ப்பு: ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று நடவுக்கு எதிர்ப்பு: ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று நடவுக்கு எதிர்ப்பு: ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
ADDED : மே 20, 2024 10:51 PM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமையிலூர் ஊராட்சிக்கு உட்பட்டது சித்தாலப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு மத்தியில் 1.5 ஏக்கர் பரப்பில் அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த நிலத்தை சில ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டில் வைத்துஉள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, அந்த நிலத்தில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு செய்ய ஊராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அந்நிலத்தை தன் கட்டுப்பாட்டில் ஆக்கிரமித்துள்ள தனிநபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைஅடுத்து மரக்கன்றுகள் நடவு பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சிறுமையிலூர் ஊராட்சி தலைவர் சற்குணா கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, ஊராட்சிகளில் 1,000 மரக்கன்றுகள் நடவு திட்டம், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, சிறுமையிலூர் ஊராட்சியில், வேம்பு, அரசன், புங்கன், நாவல், கொய்யா, அத்தி உள்ளிட்ட 1,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அதை நடவு செய்து பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக முதற்கட்டமாக நீர் ஆதாரம் ஏற்படுத்தும் பொருட்டு, சித்தாலப்பாக்கம் தோப்பு புறம்போக்கு நிலத்தில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் குளம் வெட்டும் பணி துவங்கப்பட்டது.
இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த தனிநபர், நிலம் தன் கட்டுப்பாட்டில் உள்ளதென கூறி, எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலங்களை மீட்டு தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

