/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலாவதியான பீர் பாட்டில்கள் கிடங்கில் ஒப்படைக்க உத்தரவு
/
காலாவதியான பீர் பாட்டில்கள் கிடங்கில் ஒப்படைக்க உத்தரவு
காலாவதியான பீர் பாட்டில்கள் கிடங்கில் ஒப்படைக்க உத்தரவு
காலாவதியான பீர் பாட்டில்கள் கிடங்கில் ஒப்படைக்க உத்தரவு
ADDED : மே 10, 2024 10:07 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 மதுபானக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, மது மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், சில டாஸ்மாக் கடைகளில், காலாவதியான பீர் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக, மதுப்பிரியர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இருப்பினும், கோடைக் காலத்தில் குளிர்ந்த பீர் வகைகள் காலாவதியாகி இருந்தாலும், மதுப்பிரியர்கள் வாங்கி குடித்து வந்தனர். தற்போது, டாஸ்மாக் நிர்வாகம், காலாவதியான பீர்களை விற்பனை செய்யக்கூடாது என, உத்தரவு பிறப்பித்துள்ளது.இதையடுத்து, காஞ்சி புரம் டாஸ்மாக் மேலாளர், அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் காலாவதியான பீர்களை விற்பனை செய்யக் கூடாது.
இதுபோன்ற பீர் வகைகள் இருந்தால், உடனடியாக டாஸ்மாக் கிடங்கிற்கு எடுத்து வரும்படி, டாஸ்மாக் விற்பனை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.