/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள இதர சன்னிதிகள்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள இதர சன்னிதிகள்
ADDED : மே 25, 2024 10:08 PM
அழகியசிங்கர் சன்னிதி: யோக நாசிம்மர் இங்கு கோவில் கொண்டுள்ளார்.
சக்கரத்தாழ்வார். சன்னிதி: சக்கரத்தாழ்வார் சன்னிதியான சுதர்சனப் பெருமாள் சன்னிதி அனந்தசரஸ் புஷ்கரணி (திருக் குளம்) கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.
கருமாணிக்க வரதர் சன்னிதி: ஆளவந்தார். பிரகாரத்தில் அமைந்துள்ளது. குழந்தை வேண்டுவோரின் பிரார்த்தனை ஸ்தலம். திருவனந்தாழ்வார். சன்னிதி: திருமணப்பேறு வேண்டுவோர்
வலம்புரி விநாயகர் சன்னிதி; தடையில்லா வாழ்வு வேண்டுவோர் பிரார்த்தனை தலம்.
கோவில் சிறப்பு:
சத்திய விரத ஷேத்திரமாகிய இங்கு விரதங்கள், தானம், வேள்வி, ப்ராயசித்தம் முதலியவற்றில் எது செய்தாலும் புண்ணியம் ஆயிரம் மடங்காக அதிகரிக்கக்கூடியது. அதை நாம் மனப்பூர்வமாகவும், சிரத்தையுடனும் செய்தால் பூர்வ பலனை அடையலாம்.
2. கஜேந்திர ஆழ்வார் ஆடி மாதம் சுக்ல துவாதசியில் ஆராதனம் செய்கிறார்.
3. ப்ரகஸ்பதி புரட்டாசி மாதம் திருவோணம் திருநட்சத்தி ரத்தில் ஆராதனம் செய்கிறார்.
4. திருவனந்தாழ்வான் தை மாதம் சுக்லபஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து துவாதசியில் ஆராதனம் செய்கிறார்.
5. கிருத யுகத்தில் பிரம்மாவும், த்ரேதா யுகத்தில் கஜேந்திரனாழ்வானும், தவாபரயுகத்தில் பிரஹஸ்பதியும், கலியுகத்தில் திருவனந்தாழ்வானும் பூஜை செய்கின்றனர் எனப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
6. வரதராஜப் பெருமாளை திருமங்கையாழ்வார் 4 பாசு ரங்களிலும், பூதத்தாழ்வார் 2 பாசுரங்களிலும் பேயாழ்வார். ஒரு பாசுரத்திலும் சனம் மங்களாசா செய்துள்ளனர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் அயர்வரு அமரர்கள் அதிபதி எனக் குறிப்பிட்டது இந்தப் பெரு மாளைத்தான் என ஆன்றோர்கள் கூறுவர். அதற்கேற்ப நம்மாழ்வார் இக்கோவிலில் மட்டும் ஞான முத்திரையின்றி தம் நெஞ்சில் கை வைத்து எழுந்தருளியுள்ளார்.