/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் பள்ளி வளாகத்தில் விபத்து அபாயம்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் பள்ளி வளாகத்தில் விபத்து அபாயம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் பள்ளி வளாகத்தில் விபத்து அபாயம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் பள்ளி வளாகத்தில் விபத்து அபாயம்
ADDED : ஆக 06, 2024 01:54 AM

கோவிந்தவாடி,:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சியில், கம்மவார்பாளையம் துணை கிராமத்தில், துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 35க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக, தினசரி தண்ணீர் ஏற்றம் செய்து, கம்மவார்பாளையம் கிராமத்தினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடித்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், நீர்த்தேக்க தொட்டியின் அடி பாகம் சேதம் ஏற்பட்டு சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்துள்ளது.
சேத துாண்களில், அரச மரச்செடிகள் வளர்ந்து, கூடுதல் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் இடிந்து விழுவதற்கு முன், பள்ளி வளாகத்தில் இருந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என, பள்ளி மாணவர்களின் பெற்றோர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, கோவிந்தவாடி ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, நீரேற்றும் பைப் லைன் இணைப்பு ஏற்படுத்த ஒப்பந்தம் எடுத்தவருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
அவர், இணைப்பு கொடுத்த பின், பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.