/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேன்பேட்டையில் நெற்களம் அமைப்பு
/
தேன்பேட்டையில் நெற்களம் அமைப்பு
ADDED : மே 06, 2024 05:06 AM
மேல்கதிர்பூர், : காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் ஊராட்சி, மேட்டுகுப்பம் கிராம விவசாயிகள் அதிகளவு நெல் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை உலர்த்த நெற்களம் அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024 - -25ன் மேட்டுகுப்பம் கிராமம், தேன்பேட்டையில் 8.88 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நெற்களம் அமைக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தபின், நெற்களம் திறக்கப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.