/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கயிறு அறுந்து விழுந்து பெயின்டர் உயிரிழப்பு
/
கயிறு அறுந்து விழுந்து பெயின்டர் உயிரிழப்பு
ADDED : செப் 13, 2024 08:44 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், மேல்புதூரைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 57; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் வாலாஜாபாத் பேரூராட்சி, செங்கல்வராய நகரில் அஜித் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கட்டட சுவரின் வெளிப்பகுதியில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, தன் உடலில் கயிறு கட்டிக்கொண்டு தொங்கியவாறு பெயின்ட் அடித்துள்ளார். எதிர்பாராத விதமாக கயிறு அறுந்ததில், சொக்கலிங்கம் கீழே விழுந்தார்.
இதில், படுகாயம் அடைந்தவரை சக தொழிலாளர்கள் மீட்டு, வாலாஜாபாத் வட்டார மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.