/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர் மண்டி கிடக்கும் பள்ளம்பாக்கம் சுடுகாடு
/
புதர் மண்டி கிடக்கும் பள்ளம்பாக்கம் சுடுகாடு
ADDED : ஆக 04, 2024 01:31 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் ஊராட்சியில், பள்ளம்பாக்கம் காலனி துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இறந்தால், புதைக்கவும் மற்றும் எரிக்கவும் சுடுகாடு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சுடுகாட்டிற்கு கைபம்பு மற்றும் சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சுடுகாடு வளாகத்தில், சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கிறது.
இதனால், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல முடியாத அளவிற்கு சீமைக் கருவேல மரங்கள் இடையூறாக இருக்கிறது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் சுடுகாடு மற்றும் குடிநீர் வசதி, பாதை ஆகிய வசதிகளை உறுதிப்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.