/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்சிகள் கண்டு கொள்ளாததால் ஊராட்சி நிர்வாக குடிநீர் பானைகள்
/
கட்சிகள் கண்டு கொள்ளாததால் ஊராட்சி நிர்வாக குடிநீர் பானைகள்
கட்சிகள் கண்டு கொள்ளாததால் ஊராட்சி நிர்வாக குடிநீர் பானைகள்
கட்சிகள் கண்டு கொள்ளாததால் ஊராட்சி நிர்வாக குடிநீர் பானைகள்
ADDED : மார் 23, 2024 11:55 PM

காஞ்சிபுரம்:கோடைக்காலம் துவங்கும் போது, பிரதான அரசியல் கட்சியினர், அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல் திறப்பது வழக்கம். நடப்பாண்டு, பங்குனி மாதம் துவங்கியும், எந்த ஒரு அரசியில் கட்சியினரும், தண்ணீர் பந்தலை திறக்கவில்லை.
மேலும், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், தண்ணீர் பந்தல் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளன.
இருப்பினும், பள்ளி மற்றும் கல்லுாரிக்கு சொல்லும் மாணவ- - மாணவியர் நலன் கருதி அந்தந்த பேருந்து நிறுத்தங்களில் ஊராட்சி நிர்வாகங்கள் தண்ணீர் பானைகள் அமைத்துள்ளன.
குறிப்பாக, காஞ்சிபுரம்- - படப்பை சாலையில், தேவரியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், அதே ஊராட்சி நிர்வாகம் இரண்டு மண்பானைகள் வைத்து தண்ணீர் நிரப்பி உள்ளனர். அதில் இருந்து தண்ணீரை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பல்வேறு வேலைக்கு செல்வோர் தாகத்திற்கு தண்ணீர் குடித்து வருகின்றனர்.
இதேபோல, பிற ஊராட்சி நிர்வாகங்களிலும் சுய விளம்பரம் இன்றி கடைப்பிடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

