/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலையில் ரூ.8 கோடி கேட்டு மிரட்டல்; ஊராட்சி தலைவியின் கணவர், கவுன்சிலர் கைது
/
தொழிற்சாலையில் ரூ.8 கோடி கேட்டு மிரட்டல்; ஊராட்சி தலைவியின் கணவர், கவுன்சிலர் கைது
தொழிற்சாலையில் ரூ.8 கோடி கேட்டு மிரட்டல்; ஊராட்சி தலைவியின் கணவர், கவுன்சிலர் கைது
தொழிற்சாலையில் ரூ.8 கோடி கேட்டு மிரட்டல்; ஊராட்சி தலைவியின் கணவர், கவுன்சிலர் கைது
ADDED : மார் 05, 2025 05:06 AM

ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் அருகே தொழிற்சாலையில், 8 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக, ஊராட்சி தலைவியின் கணவரும், தி.மு.க., பிரமுகருமான வேலு, சுயேச்சை கவுன்சிலர் ராகுல்காந்தி ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவியாக இருப்பவர் தேவி; சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தி.மு.க., பிரமுகரான இவரது கணவர் வேலுவும், சுயேச்சை கவுன்சிலரான ராகுல் காந்தியும், ஒரகடம் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும், 'அசன்டாஸ் பஸ்ட் ஸ்பேஸ்' என்ற தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தொழிற்சாலை சட்ட ஆலோசகர் அருண், ஒரகடம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, ஊராட்சி தலைவியின் கணவர் வேலு, 54, கவுன்சிலர் ராகுல்காந்தி, 31, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கடந்த ஜன., 29ல், புதிய தொழிற்சாலையின் கட்டுமானப் பணி நடக்கும் பகுதிக்கு சென்ற வேலு, 'தொழில் துவங்க வேண்டும் என்றால், நாங்கள் சொல்வதைத் தான் கேட்க வேண்டும்.
இல்லை என்றால் எந்த பணியும் நடக்காது' எனக்கூறி, கட்டுமான பணிகளை நிறுத்தியுள்ளார்.
'பணிகளை மீண்டும் தொடர வேண்டும் என்றால், 8 கோடி ரூபாய் வேண்டும்; முன்பணமாக, 15 லட்சம் ரூபாய் தர வேண்டும்; இல்லை என்றால் உங்களை காலி பண்ணிடுவேன்' என்று, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.