ADDED : செப் 01, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட செயலர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் நேற்று, காஞ்சிபுரத்தில் நடந்தது.
வரும் 12ம் தேதி, சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த பகுதி நேர ஆசிரியர்களும் குடும்பத்துடன் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
மாவட்ட தலைவர் ராமதாஸ் வரவேற்றார்.