/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏர்போர்ட்டில் 'ஏசி' பராமரிப்பில் அலட்சியம் புழுக்கத்தில் தவிக்கும் பயணியர்
/
ஏர்போர்ட்டில் 'ஏசி' பராமரிப்பில் அலட்சியம் புழுக்கத்தில் தவிக்கும் பயணியர்
ஏர்போர்ட்டில் 'ஏசி' பராமரிப்பில் அலட்சியம் புழுக்கத்தில் தவிக்கும் பயணியர்
ஏர்போர்ட்டில் 'ஏசி' பராமரிப்பில் அலட்சியம் புழுக்கத்தில் தவிக்கும் பயணியர்
ADDED : மார் 11, 2025 12:19 AM
சென்னை, சென்னை விமான நிலையத்தில், 'ஏசி' இயந்திரங்களை முறையாக பராமரிக்காததால், பயணியர் புழுக்கத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிலைய முனையங்களை சுற்றி கண்ணாடி இருப்பதால், வெளியில் இருந்து காற்று வர வசதியிருக்காது. இதனால், 'ஏசி'யில் குளிர் காற்றுதான் பிரதானம். இதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
பொதுவான வெப்பநிலை, 22 - 25 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். அந்தந்த விமான நிலையங்களின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு, 'ஆட்டோமேஷன் சென்சார்' வழியாக வெப்ப நிலை தானாக சீர் செய்யப்படும்.
கோடை காலம் துவங்கியுள்ள நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் உள்ள அனைத்து முனையங்களிலும், 'ஏசி'யின் செயல்பாடு சரியாக இல்லாமல், பயணியர் புழுக்கத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
குறிப்பாக, குழந்தைகள் முதியவர்கள் போன்றவர்களுக்கு இந்த நிலை பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
இதுகுறித்து, விமான பயணி ஒருவர் கூறியதாவது:
சென்னை விமான நிலைய முனையங்களில் காத்திருக்கும் நேரங்களில், 'ஏசி' வசதி போதுமானதாக இல்லை. மதிய நேரத்தில்தான் இப்படி இருக்கிறது என்றால், இரவு நேரங்களில் அதைவிட மோசம்; முறையாக கையாளப்படவில்லை.
விமான நிலைய அதிகாரிகள் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது, 'ஏசி'யில் வெப்பநிலை சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்; பயணியருக்கு சரியான சேவை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, 'ஏசி'யின் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு வருகிறது' என்றனர்.