/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆட்சிவிளாகம் திருநங்கையர் தொகுப்பு வீடுகள் திறப்பு விழாவிற்கு முன் 'பேட்ச் ஒர்க்'
/
ஆட்சிவிளாகம் திருநங்கையர் தொகுப்பு வீடுகள் திறப்பு விழாவிற்கு முன் 'பேட்ச் ஒர்க்'
ஆட்சிவிளாகம் திருநங்கையர் தொகுப்பு வீடுகள் திறப்பு விழாவிற்கு முன் 'பேட்ச் ஒர்க்'
ஆட்சிவிளாகம் திருநங்கையர் தொகுப்பு வீடுகள் திறப்பு விழாவிற்கு முன் 'பேட்ச் ஒர்க்'
ADDED : ஏப் 17, 2024 10:38 PM

செய்யூர்,:செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் திருநங்கையர், சரியான முறையில் வீட்டுமனை மற்றும் வீடுகள் இல்லாததால், அவதிப்பட்டு வந்தனர்.
செய்யூர் அடுத்த கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிவிளாகம் பகுதியில், அரசு சார்பாக தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக, வீடு இல்லாத 50 திருநங்கையருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது.
தனியார் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியுதவியின் கீழ், தனியார் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக, 50 திருநங்கையருக்கு, தலா 8.78 லட்சம் ரூபாய் என, மொத்தம் 4 கோடியே 39 லட்சத்து 46,000 ரூபாய் மதிப்பீட்டில், வீடு கட்டுவதற்கான பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது.
திருநங்கையருக்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள், தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, பல இடங்களில் சிமென்ட் பூச்சுக்கள் உடைந்து கொட்டுகின்றன. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் தொகுப்பு வீடுகளின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் கியூப் பிரிவை சேர்ந்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு, தொகுப்பு வீடுகளின் உறுதித்தன்மை, கட்டுமானப் பொருட்களின் தரம், கட்டடத்தின் அளவீடுகளை ஆய்வு செய்து, தொகுப்பு வீடுகளின் சுவர்களில் செய்யப்பட்டுள்ள பூச்சு வேலை தரமற்ற முறையில் உள்ளதாக அறிக்கை அளித்தனர்.
அதன்படி, தற்போது தனியார் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக, தொகுப்பு வீடுகளின் சுவர்களில் செய்யப்பட்டுள்ள சிமென்ட் பூச்சுகளை அகற்றி, புதிதாக பூச்சு வேலை செய்யும் பணிகள், சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.

