/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி
/
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 06, 2024 01:59 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, அசோக் நகருக்கும், மாமல்லன் நகருக்கும் இடையே உள்ள ரயில்வே இருப்பு பாதையின்கீழ் மினி சுரங்கப்பாதை உள்ளது.
சின்ன காஞ்சிபுரம், வையாவூர், கோனேரிகுப்பம், ஏனாத்துார், மாமல்லன் நகர், அசோக் நகர், மின்நகர், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதியினர் இந்த சுரங்கப்பாதை வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், சுரங்கப்பாதை அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக, சுரங்கப்பாதையில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், சிறிய சக்கரம் கொண்ட இருசக்கர வாகனங்களின் 'சைலன்சரில்' மழைநீர் புகுந்து வாகனம் பழுதடைகிறது.
ஒவ்வொரு மழையின்போதும் இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சுரங்கப்பாதையில் இருந்து, மழைநீர் வெளியேறும் கால்வாய் அமைந்துள்ள இடம், ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடம் என்பதால், கோனேரிகுப்பம் ஊராட்சி சார்பில், கால்வாயை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு ரயில்வே நிர்வாகம்தான் தீர்வு காணவேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனவே, சுரங்கப்பாதையில், மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால்வாயை துார்வாரி, கான்கிரீட் கால்வாய் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் வலியுறுத்தி உள்ளனர்.