/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறந்து கிடக்கும் கால்வாய் நடைபாதை பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

ADDED : பிப் 22, 2025 01:13 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையோரம், ‛கான்கிரீட்' மழைநீர் வடிகால்வாய் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், விபத்தில் சிக்குவதை தவிர்க்க, ‛கான்கிரீட்' மழைநீர் வடிகால்வாய் மீது அமைக்கப்பட்டது.
இந்நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் நுழைவாயில் பகுதியில், கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள நடைபாதை இரு இடங்களில் மூடப்படாமல் உள்ளது.
இதனால், நடைபாதையின் மீது நடந்து செல்லும் பாதசாரிகள், கவனக்குறைவாக திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே, நடைபாதையில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாயின் மீது கான்கிரீட் சிலாப் அமைக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.