/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபாதையில் குறைந்த உயரத்தில் மின்மாற்றியால் அச்சத்தில் பாதசாரிகள்
/
நடைபாதையில் குறைந்த உயரத்தில் மின்மாற்றியால் அச்சத்தில் பாதசாரிகள்
நடைபாதையில் குறைந்த உயரத்தில் மின்மாற்றியால் அச்சத்தில் பாதசாரிகள்
நடைபாதையில் குறைந்த உயரத்தில் மின்மாற்றியால் அச்சத்தில் பாதசாரிகள்
ADDED : ஏப் 30, 2024 06:35 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 180க்கும் அதிகமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், வைப்பூர், ஏறையூர் கிராமங்கள் ஒரகடம் சிப்காட்டின் ஒரு அங்கமாக விளங்குகிறது.
இந்த பகுதிகளில் மட்டும் 30க்கும் அதிகமான தொழிற்சாலைகளில், 10,000த்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஒரகடத்தில் இருந்து, எறையூர் செல்லும் சிப்காட் சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ- - மாணவியர், வேலைக்கு செல்வோர், மற்ற தேவைக்காக ஒரகடம், படப்பை, தாம்பரம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இந்த சாலையில் தினமும் சென்று வருகின்றனர்.
தவிர, வைப்பூர், எறையூர் மற்றும் ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி, தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், சிப்காட் சாலை வழியாக தினமும், தாங்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்கு நடந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், எறையூர் செல்லும் சிப்காட்சாலையில், சுந்தரம் டி.வி.எஸ்., தனியார் தொழிற்சாலை அருகில், நடைபாதையில் உள்ள மின் மாற்றி மிகவும் உயரம் குறைவாக உள்ளது.
எனவே, தொழிற்சாலைகளுக்கு இந்த சாலையில் நடந்து செல்லும், ஊழியர்கள் மற்றும் பாதசாரிகள் மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் நடந்து சென்று வருகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன், இதே சாலையில், எறையூர் அடுத்த, வல்லம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகில், உயரம் குறைவாக இருந்த, மின்மாற்றியில், கன்டெய்னர் லாரி ஓட்டுனர், லாரியில் பின் கதவை திறக்கும் போது, மின்மாற்றியில் எதிர்பாராத விதமாக பட்டதில், ஓட்டுனர் மற்றும் அவரை காப்பாற்ற வந்த மற்றொரு ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எனவே, மற்றொரு உயிர் சேதம் ஏற்படும் முன், நடைபாதையில் உயரம் குறைவாக உள்ள மின்மாற்றியை, உயர்த்தி அமைக்க, ஒரகடம் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

