/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடிய சகதிநீர் காஞ்சியில் பாதசாரிகள் அவதி
/
சாலையில் வழிந்தோடிய சகதிநீர் காஞ்சியில் பாதசாரிகள் அவதி
சாலையில் வழிந்தோடிய சகதிநீர் காஞ்சியில் பாதசாரிகள் அவதி
சாலையில் வழிந்தோடிய சகதிநீர் காஞ்சியில் பாதசாரிகள் அவதி
ADDED : ஆக 07, 2024 02:34 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் இயங்கிய மாநகராட்சி அலுவலக கட்டடம், ஆங்கிலேயேர் ஆட்சியின்போது கட்டப்பட்டது. பழமையான இக்கட்டடம் இடிக்கப்பட்டு, 10 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதியுடன் விசாலமான புதிய கட்டடம் கட்டுமானப் பணி துவக்கப்பட்டு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால், கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழிகளில் மழைநீர் நிரம்பி, சகதிநீராக மாறியது.
இதையடுத்து கட்டுமானப் பணியை துவக்க, சகதிநீரை மழைநீர் வடிகால்வாய் வாயிலாக வெளியேற்றாமல், வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் விட்டனர்.
இதனால், அன்னை இந்திரா காந்தி சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் சிலர் சகதிநீரில் வழுக்கி விழுந்தனர். வேகமாக சென்ற வாகனங்களால், சகதிநீர் தெளித்ததால், நடந்து சென்றவர்கள் மனஉளச்சலுக்கு ஆளாகினர்.
இனிவரும் மழையின்போது, கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தேங்கும் சகதிநீரை சாலையில் விடாமல், மழைநீர் வடிகால்வாயில் விட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.