/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிதிரிப்பேட்டை கூட்டு சாலையில் மின் விளக்கு அமைக்கக்கோரி மனு
/
கிதிரிப்பேட்டை கூட்டு சாலையில் மின் விளக்கு அமைக்கக்கோரி மனு
கிதிரிப்பேட்டை கூட்டு சாலையில் மின் விளக்கு அமைக்கக்கோரி மனு
கிதிரிப்பேட்டை கூட்டு சாலையில் மின் விளக்கு அமைக்கக்கோரி மனு
ADDED : ஜூலை 30, 2024 07:16 AM
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ரயில் நிலையம் அருகே, உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, ம.தி.மு.க., பேரூர் செயலர், பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.
வாலாஜாபாத் பேரூராட்சி ம.தி.மு.க., செயலர் சிவகுமார் அளித்த மனுவில் கூறியதாவது:
வாலாஜாபாத் ரயில் நிலையத்தின் வழியாக, வாலாஜாபாத், ஊத்துக்காடு, வெள்ளேரியம்மன் கோவில், புத்தகரம், கிதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
வேலை முடித்து விட்டு, ரயிலில் வீடு திரும்புவோர், வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் இருளில், அச்சத்துடன் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. அதனால், வாலாஜாபாத் ரயில் நிலைய கூட்டு சாலையில், விபத்து ஏற்பட நேரிடுகிறது.
இதை தவிர்க்க, கிதிரிப்பேட்டை கூட்டு சாலையில், உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.