/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3 நாளாக மனு தாக்கல் இல்லை கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'
/
3 நாளாக மனு தாக்கல் இல்லை கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'
3 நாளாக மனு தாக்கல் இல்லை கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'
3 நாளாக மனு தாக்கல் இல்லை கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'
ADDED : மார் 22, 2024 10:31 PM
காஞ்சிபுரம்:தமிழகத்துக்கான லோக்சபா தேர்தல் முதற்கட்டமாக ஏப்., 19ல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், 20ம் தேதி துவங்கியது.
முதல் நாளான புதன் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராத நிலையில், இரண்டாம் நாளான நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வருவர் என, போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், நேற்று முன்தினமும் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.
இந்நிலையில், மூன்றாம் நாளாக நேற்றும் எந்த வேட்பாளரும், காஞ்சிபுரம் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை, தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கலைச்செல்வி, தன் இருக்கையில், வேட்பாளர்களுக்காக காத்திருந்தார்.
ஆனால், யாரும் வராததால், 3:00 மணிக்கு பின் தேர்தல் பிற பணிகளை கவனிக்க துவங்கினார். இதனால், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட, தி.மு.க.,, சுயேச்சை, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சி என, பல தரப்பினரும், 25க்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை வாங்கி சென்றுள்ளனர்.
திங்கட்கிழமை அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும், தி.மு.க., வேட்பாளர் செல்வம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

