/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ளாரை மதுக்கடையை அகற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மனு
/
வெள்ளாரை மதுக்கடையை அகற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மனு
வெள்ளாரை மதுக்கடையை அகற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மனு
வெள்ளாரை மதுக்கடையை அகற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மனு
ADDED : ஜூலை 31, 2024 04:31 AM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வெள்ளாரை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, 'மக்களுடன் முதல்வர்' முகாமில், அந்த கிராம மக்கள் மனு அளித்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சி நாவலுாரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில், பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாாக வள்ளாரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் உள்ள வெள்ளாரை, நாவலுார், மேட்டு கொளத்துார் ஆகிய கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர் 100க்கும் மேற்பட்டோர், மண்ணிமங்கலம் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், நாவலுாரில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளாரை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மேலும், அங்கு மது அருந்தும் குடிமகன்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர்.
இதனால், மாலை நேரத்தில் அவ்வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த அரசு டாஸ்மாக் கடையை அகற்ற, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.