/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊத்துக்காடு டாஸ்மாக் கடை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
/
ஊத்துக்காடு டாஸ்மாக் கடை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
ஊத்துக்காடு டாஸ்மாக் கடை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
ஊத்துக்காடு டாஸ்மாக் கடை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
ADDED : செப் 05, 2024 08:00 PM
காஞ்சிபுரம்:ஊத்துக்காடு கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில், ஊத்துக்காடு கிராமத்தில் எல்லம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு, காஞ்சிபுரம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இங்கு, வரும் மக்கள் அம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு, சமைத்து சாப்பிட்டு செல்கின்றனர்.
வெளியூர் பக்தர்கள் சமைக்கும் போது, ஊத்துக்காடு டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு செல்லும் 'குடி'மகன்கள், கோவிலுக்கு வருபவர்களிடம் வம்பிழுத்து செல்கின்றனர்.
மேலும், டாஸ்மாக் கடை அருகே இருக்கும், விஜயா கார்டன் அங்காளம்மன் மற்றும் குடியிருப்பு காலி இடத்தில் மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்து வீசி விட்டு செல்கின்றனர்.
எனவே, ஊத்துக்காடு கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை, பக்தர்களின் நலன் கருதி வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.