/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரா கலை கல்லுாரியில் மருந்து வடிவமைப்பு பயிலரங்கு
/
சங்கரா கலை கல்லுாரியில் மருந்து வடிவமைப்பு பயிலரங்கு
சங்கரா கலை கல்லுாரியில் மருந்து வடிவமைப்பு பயிலரங்கு
சங்கரா கலை கல்லுாரியில் மருந்து வடிவமைப்பு பயிலரங்கு
ADDED : மார் 02, 2025 12:26 AM
ஏனாத்துார், காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பயோடெக்னாலஜி முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் சார்பில், கணினி உதவியுடன் மருந்து வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகுறித்த மூன்று நாள் பயிலரங்கு கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது.
மூன்று நாட்கள் நடந்த பயிலரங்கை கல்லுாரி முதல்வர் முனைவர் கலை ராம வெங்கடேசன், அமெரிக்காவின் ஓக்ல ஹாமாவில் உள்ள சைட்டோவன்ஸ் பயோலாஜிக்ஸின் முதன்மை விஞ்ஞானி முனைவர் விஸ்வநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கல்லுாரியின் மருந்து வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு மையம், பயோடெக்னாலஜி ஆராய்ச்சித் துறை, பேராசிரியர் ரமேஷ், முனைவர் ராஜலட்சுமிஆகியோர் நடைமுறை செயல் விளக்கங்கள், பயிற்சி அமர்வுகள் மற்றும் விவாதம் வாயிலாக நேரடி அமர்வுகளுக்கு தலைமை வகித்தனர்.
இதில், முதுகலைமாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மருந்து வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் அறிவு பரிமாற்றம், புதுமை மற்றும் திறன் மேம்பாட்டிற்காக விளக்கம் அளிக்கப்பட்டது.