ADDED : ஏப் 01, 2025 12:11 AM

காஞ்சியில் ரம்ஜான் கொண்டாட்டம்
காஞ்சிபுரம், இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித ரமலான் மாதத்தில், 30 நாட்கள், நோன்பு மேற்கொள்வர். நோன்பு நிறைவடைந்த பின், ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, காஞ்சிபுரத்தில் உள்ள இஸ்லாமியர்கள் நேற்று ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். காஞ்சிபுரம், காந்தி சாலை தேரடி அருகில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில், திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தொடர்ந்து, நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கம் வசிப்பவர்களுடன் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இதேபோல், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெரு, நசரத்பேடப்டை, மதரஸா ரெட்டி தெரு, ஒலிமுகமதுபேட்டை, சி.எஸ்.செட்டி தெரு, திருக்காலிமேடு, சேக்குபேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் நேற்று ரம்ஜான் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.