/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இருளர் குடியிருப்பில் மரக்கன்று நடவு
/
இருளர் குடியிருப்பில் மரக்கன்று நடவு
ADDED : ஏப் 15, 2024 03:57 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் தன்னார்வ அமைப்பினர், ஆண்டுதோறும், ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம், முன்னாள் ஜனாதிபதி கலாம் பிறந்தநாள், நினைவு நாள் உள்ளிட்ட தினங்களில், பொது இடங்களில் மரக்கன்று நடவு செய்தும், சாலையோரங்களில் விதைப்பந்து துாவியும் வருகின்றனர்.
அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, காஞ்சிபுரம் ஒன்றியம், விப்பேடு ஊராட்சி, குண்டுகுளத்தில் உள்ள மூவேந்தர் நகர், இருளர் குடியிருப்பில், வேம்பு, புங்கன், நீர்மருது, பூவரசன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்தனர். கீழம்பி, கீழ்கதிர்பூர் சாலையோரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், சித்திரை மாதம் முழுதும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு நீர்மோர் வழங்க முடிவு செய்யப்பட்டு, சித்திரை முதல் தேதியான நேற்று, காஞ்சிபுரம் பல்வேறு வீதியில் சாலையோரம் வசிப்போருக்கு நீர்மோர் வழங்கினர்.

