/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிப்பறை கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்
/
கழிப்பறை கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்
ADDED : ஜூன் 25, 2024 06:59 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, எம்பெருமான் கோவில் தெருவில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பொது கழிப்பறையை, அப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறை கட்டடத்தையொட்டி, செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், அதில், விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்துள்ளன.
மேலும், கட்டடத்தின் தளத்தில் அரச மரம் மற்றும் ஆல மரத்தின் செடிகள் வளர்ந்து வருகின்றன. இச்செடிகளின் வேர்கள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில் விரிசல் ஏற்பட்டு கட்டடம் வலுவிழக்கும் சூழல் உள்ளது.
எனவே, கழிப்பறை கட்டடத்தை ஒட்டி, புதர்போல மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளையும், கூரையில் வளர்ந்துள்ள அரசமரம், ஆலமர செடிகளையும் வேருடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.