ADDED : ஆக 22, 2024 12:56 AM

காஞ்சிபுரம்:விதைகள் தன்னார்வ அமைப்பு, பாலாறு லயன் சங்கம், திரிவேணி அகாடமி பள்ளி, ஆதி கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், காஞ்சி 360 தன்னார்வ அமைப்பு சார்பில், பிளாஸ்டிக் பயன்பாடு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாபாதில் நேற்று நடந்தது.
பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணியை, வாலாஜாபாத் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சங்கர், பாலாறு லயன் சங்கம் தலைவர் அரிகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முக்கிய வீதி வழியாக சென்ற பேரணி, பழைய போலீஸ் நிலையம் அருகில் நிறைவு பெற்றது.
பேரணியில் பங்கேற்றவர்கள், 'பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம். பிளாஸ்டிக் எரித்தால் காற்று மாசடையும், மண்ணை காப்போம் உள்ளிட்டவை இடம்பெற்ற பதாகையை ஏந்தி, மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.