/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தட்சிணாமூர்த்தி கோவிலில் உழவார பணிகள்
/
தட்சிணாமூர்த்தி கோவிலில் உழவார பணிகள்
ADDED : ஏப் 03, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், அகிலாண்டேஸ்வரி உடனுறை தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
இக்கோவில் வளாகத்தில் இருக்கும் ஒட்டடைகளை, தேசிய ஹிந்து கோவில்கள் பவுண்டேஷன் சார்பில், தேசிய செயலர் சுரேஷ் தலைமையில், சிவனடியார்கள் உழவாரப் பணி மேற்கொண்டனர்.
மேலும், கோவில் கோபுரம், கொடி மரம் மற்றும் கோவில் வளாகம் வெளியே சுத்தம் செய்தனர். இந்த, உழவாரப் பணியில், சிவனடியார்கள் பலர் பங்கேற்றனர்.

