sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வெளியூர் செல்வோர் தகவல் தெரிவிக்க போலீசார் துண்டு பிரசுரம் வழங்கல்

/

வெளியூர் செல்வோர் தகவல் தெரிவிக்க போலீசார் துண்டு பிரசுரம் வழங்கல்

வெளியூர் செல்வோர் தகவல் தெரிவிக்க போலீசார் துண்டு பிரசுரம் வழங்கல்

வெளியூர் செல்வோர் தகவல் தெரிவிக்க போலீசார் துண்டு பிரசுரம் வழங்கல்


ADDED : மே 26, 2024 12:46 AM

Google News

ADDED : மே 26, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போர், வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றால், உத்திமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது.

போலீசார் வழங்கும் துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்திரமேரூர் காவல் துறையின் சார்பாக பொதுமக்களுக்கு கனிவான வேண்டுகோள். உத்திரமேரூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு, நான்கு மாதமாக உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பூட்டி இருக்கும் வீடுகளில் தொடர்ந்து திருட்டு குற்றம் நடந்து வருகிறது.

பொதுமக்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளி ஊருக்கு சென்றால், நீங்கள் திரும்பி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்ற தகவலையும், உங்களுடைய முகவரியையும், தவறால் அவசியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் காவல் துறையின் கனிவாக அறிவுரையை பின்பற்றும்படியும் மற்றும் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படியும், தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதில், உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மொபைல் எண் 89390 74777, சப் இன்ஸ்பெக்டர் 96778 09631, உத்திரமேரூர் போலீஸ் நிலையம், 94981 00283 ஆகிய மொபைல் போன் எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us